

உண்மை நிகழ்வினைப் படமாக எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் அந்த நபரிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர் வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் நைசாக ஒதுங்கி விட வேண்டும். இல்லாவிட்டால் வம்புதான். கேரளாவில் அப்படி ஒரு பிரச்னை ஓடிக்கொண்டு இருக்கிறது.
தினா, சமஸ்தானம், ஷங்கரின் ‘ ஐ’ தமிழரசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி.
சுரேஷ் கோபியின் 250 வது படமாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர், மாத்யூஸ் தாமஸ் இயக்கி வருகிறார். கடுவாகுன்னேல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை தழுவிய இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், மற்றும் டீசர் சுரேஷ் கோபியின் பிறந்த நாளன்று வெளிவந்தது.
இப்போஸ்டரை பார்த்ததும் ஜினு ஆபிரகாமுக்கு அதிர்ச்சி . கடுவாகுன்னேல் குருவச்சன் கதையை மையமாக வைத்து கடுவா என்ற கதையை எழுதியுள்ளவர் இவர்தான். இந்த கதையில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்க,. ஷாஜி கைலாஷ் இயக்கிவருகிறார்
கதாசிரியர் ஜினு ஆப்ரஹாம் கோர்ட்டுக்குப் போக , நீதிமன்றம், சுரேஷ் கோபி படத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்தக் கதையின் உண்மை கேரக்டர் கடுவாகுன்னேல் குருவச்சன் .இவர் என்ன சொல்கிறார்?
“எனது வாழ்க்கைக் கதையை ரஞ்சித் பணிக்கர் படமாக்க இருப்பதாகச் சொன்னார். அனுமதி அளித்தேன். வேறு சிலரும் பேசினார்கள். ஆனால் யாரும் கதை சொல்லவில்லை. ஒரு வேளை ரஞ்சித் பணிக்கருக்கும் இந்தப் படங்களை உருவாக்குபர்களுக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றி தெரியாது. வேறு யாரும் என் கதையை படமாக்கினால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இவர் முக்கிய போலீஸ் அதிகாரிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வென்றவர் ஆவார்












