
தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால் சிலர் அன்னதானம் என்பர் .பலர் நிதானம் என்பர் .காலப்போக்கில் ரத்த தானம் சிறந்தது என்கிற முடிவுக்கு பலர் வந்திருக்கிறார்கள். அதிலும் தற்போது பிளாஸ்மா தானம் பண்ணுங்கள் என்கிறார்கள்.
குறிப்பாக கொரானாவில் இருந்து மீண்டவர்கள் தங்களின் பிளாஸ்மாவை தானம் செய்தால் கொரானாவினால் பாதிக்கப்படடவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
திருச்சியில் உயிர்த்துளி என்கிற அமைப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த முயற்சிக்கு மக்கள் செல்வன் விஜயசேதுபதி ஆதரவு அளித்திருக்கிறார் .
அனைத்து மாநில சுகாதார துறையினரும் கொரோனாவில் இருந்து குணமான அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் .
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது,”கொரோனாவிடம் இருந்து குணமடைந்த அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் இதனால் கொரோனா வைரஸ் எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றும், கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடி வரும் டாக்டர்களுக்கு பிளாஸ்மா தானம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.












