தந்தை பெரியார் மறைந்து பல்லாண்டுகள் ஆனாலும் அவ்வப்போது காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது சிலைக்கும் புகழுக்கும் அடிக்கடி இழுக்கு தேடினாலும் பூமராங் மாதிரி இழுக்கு இழைக்க நினைத்தவர்களுக்கே திரும்பி சென்று விடுகிறது.
தற்போது வேறு மாதிரியான சிக்கல் ,நடிகையும் மாடலுமான மீரா மிதுன் வழியாக வந்திருக்கிறது. இவர் அடிக்கடி அரசியல் சித்தாத்தங்களை அள்ளி விட்டுக்கொண்டே இருப்பார்.
எடப்பாடி ராமசாமியை தூக்கிவிட்டு தன்னை முதல்வராக நியமிக்கும்படி பிரதமர் மோடிக்கே டிவீட் அனுப்பினார். இப்படி பலவித நடவடிக்கைகள்.
இது மட்டுமின்றி கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களையும் கிட்டத்தட்ட நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களையும் பதிவு செய்து ஏகத்துக்கும் எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருகிறார். இதற்கு அவருக்கு ஆதரவும் கிடைத்தது.
சமீபத்தில் ரஜினி மற்றும் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு டுவிட்டை பதிவு செய்ததால் ரசிகர்கள் பலரும் மீரா மிதுன் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
திடீரென உதயநிதியுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்தார் மீராமிதுனின் இந்த இரண்டு டுவிட்டுகளும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அவர் திடீரென கருப்பு நிறத்தில் மேக்கப் போட்டு கொண்டு தனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் ’ஜெய் பெரியார்’ என்ற வார்த்தையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1975ஆம் ஆண்டு பெண்களுக்கான சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினார் தற்போது அந்த இயக்கத்தை தான் உருவாக்க தயாராக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவை திமுக தலைவர் முக ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்களுக்கும் அவர் டேக் செய்துள்ளார். இதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.












