
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்திருக்கிறார் .
இது இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியது.
தோனிக்கு நடிகர்,நடிகைகள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.அவர்களும் தங்களது வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னையை தமது இரண்டாவது சொந்த ஊர் என்று பெருமையுடன் கூறும் தோனி, சுதந்திர தினத்தன்று சென்னையில் இருந்தபடி தமது ஓய்வை அறிவித்துள்ளார்.
தோனியின் தீவிர ரசிகரான இயக்குநர் விக்னேஷ் சிவன்,தோனி குறித்த ஒரு அழகான ஆங்கில கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது,”டியர் மகேந்திர சிங். நீங்கள்தான் எங்கள் அனைவருக்கும் ராஜா. டியர் 7, அந்த 11 பேரில் நீங்கள்தான் சிறந்தவர். டியர் கேப்டன் கூல், நீங்கதான் எப்பவும் அமைதிக்கான ஸ்கூல். டியர் எம்.எஸ் நாங்கள் உங்களை இனி ரொம்ப மிஸ் செய்வோம். டியர் மாஹி பாய்.. நீங்கள் நீல சீருடைக்கு பாய் சொல்லியிருக்கலாம். ஆனால் மஞ்சள் சீருடைக்கு எப்பவுமே ஹாய்! டியர் தோனி.. உங்களுக்காக சூப்பர் பயணம் காத்திருக்கிறது” எனஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டதாக விக்னேஷ் சிவன் 2018 ஆம் ஆண்டு தோனியுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












