
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு,அசுரன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் நடிகர் நிதிஷ் வீரா.
திரையுலக பயணம் குறித்து கூறுகையில்,”செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் நடித்த மணி கதாபாத்திரம் எனக்கு பெயரை பெற்று தந்தது., சுசீந்திரனின் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் சேகர் கதாபாத்திரமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில்நான் நடித்த பாண்டியன் கதாபாத்திரம் எனக்கென ஒரு அங்கீகாரத்தை தந்திருக்கிறது.
தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்திலும், அறம் பட இயக்குனர் கோபி நாயினார் இயக்கும் கோல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் மேலும் புஷ்கர் காயத்ரி இயக்கும் வெப் தொடரிலும் நடித்து வருகிறேன் .அசுரன் படத்தின் தெலுங்கு பதிப்பில் தமிழில் நடித்த அதே வேடத்தில் நடிக்க இருக்கிறேன்.மேலும் சில பெயரிடப்படாத புதிய படங்களிலும் நடிக்க இருக்கிறேன்.வில்லன் கதாபாத்திரங்களை தவிர, சவாலான கதாப்பாத்திரங்களிலும் நடிக்க ஆசை” என்கிறார்.












