
“இதுவரை இந்தியன் என்று சொன்னது போதும்.இனிமேல் நாம் தென்னிந்தியன் என்று சொல்ல வேண்டும்” என்று பிரபல சிரிப்பு நடிகர் மயில்சாமி பொங்கியிருக்கிறார்.
நீட் தேர்வுக்கு எதிராக அண்மையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மயில்சாமி ஆளும் கட்சிகளை ஒரு வாங்கு வாங்கிவிட்டார்.
“பதவி இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என ஆளும் கட்சியினர் நினைக்க கூடாது . இதுவரை இந்தியன் என்று கூறியது போதும் ,இனிமேல் நாம் தென்னிந்தியன் எனக் கூற வேண்டும்” என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“மத்திய அரசு எதைக் கூறினாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட கூடியவர்களே தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிறார்கள் என்று, விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












