
சிலம்பரசன் ரசிகர்கள் மட்டுமல்ல ,பொதுவான கருத்துடையோர் அனைவருமே சிலம்பரசன் டி .ஆர் .படத்தின் போஸ்டர்களை வெகுவாக விரும்பி பார்க்கிறார்கள்.
அவரது ‘ஈஸ்வரன் ‘பட போஸ்டரை அடுத்து வெளிவந்த ‘மாநாடு’ போஸ்டருடன் ஒப்பிட்டு தங்களது கருத்துகளை இணையதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
தேசப்பிதா காந்தியடிகளுக்கு விருப்பமான பாடலின் வரிகளுடன் போஸ்டரையும் இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
காந்தியடிகளுக்கு பிடித்தமான ‘ரகுபதி ராகவ ராஜாராம் ‘என்கிற பாடலில் “ஈஸ்வர், அல்லாஹ் தேரே நாம்’ என்கிற வரி வரும் . இறைவனின் பெயர் ஒன்றே என்கிற கருத்தினை வலியுறுத்துகின்ற பாடல் அது.
இன்னும் சிலர் மாநாடு அப்துல் காலிக்கின் முகத்தினை மூன்று பாகமாக பிரித்து அதற்கு அன்பு கோபம் ,நெற்றிக்கண் என பெயரிட்டிருந்தனர்.
இப்படியாக பலரும் ஆய்வு நடத்துகிற வகையில் அண்மைக்கால சிலம்பரசன் பட போஸ்டர்கள் இருக்கின்றன. பாலுணர்வு ,வன்முறையை மட்டுமே வெளிப்படுத்துகிற சில போஸ்டர்களை பார்த்த கண்களுக்கு இத்தகைய போஸ்டர்கள் வித்தியாசமாக இருக்கின்றன.












