

சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்துக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கிய படம்தான் அசுரன்.
ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய படம்தான் அசுரன். முன்னர் தனுஷ் தேசியவிருது பெற்றதும் வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு தேசிய விருது கிடைத்திருக்கிறது. இதே படத்துக்காக சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ரசூல் பூக்குட்டி அடைந்திருக்கிறார்.
இசை அமைப்பாளர் டி.இமானுக்கும் .சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய்சேதுபதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரனாவத்துக்கு கிடைத்திருக்கிறது.












