
“சின்ன கட்சிகள் என்று சில்லரைத்தனமாக நினைத்துவிடாதீர்கள். அவைதான் ஆளும் கட்சிக்கு ஆப்பு வைக்கிற கட்சிகள் ” என்று லேட்டஸ்ட் சர்வே எச்சரித்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய இரண்டு கட்சிகள்தான் ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தப்போகிறது என்கிறது அந்த சர்வே.
ஆளும் கட்சியும் அதன் கூட்டணி கட்சியுமான பாட்டாளி மக்கள் கட்சி இரண்டும் அதனதன் இலக்குகளை அடையமுடியாது.
சென்னை மாவட்டத்தில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும். 47.27 சதவீத வாக்குகளை பெறும் .ஆளும் கட்சியான அதிமுக 20.81 சதவீத வாக்குகளையும் அடுத்து மக்கள் நீதி மய்யம் 6.97 வாக்குகளையும் பெறுமாம் .
அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிற கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 38 சதவீதம், திமுகவுக்கு 28 சதவீதம்,மக்கள் நீதி மய்யம் 9.5 சதவீதம் ,நாம் தமிழர் 4 சதவீதம் என வாக்குகளை பிரித்துக்கொள்ளும். அதிமுக மிகவும் கடுமையான எதிர்ப்பை சமாளிக்கவேண்டும். மக்கள் நீதி மய்யம் ,நாம் தமிழர் இரண்டும் அதிமுக வாக்குகளை அள்ளுமே தவிர திமுக வாக்குகளை அள்ளாது என்கிறது அந்த சர்வே.
மத்திய தமிழ்நாட்டில் அதிமுக -திமுக இரண்டுமே மிகவும் கடுமையான போட்டியை சந்திக்கவிருக்கின்றன. அதிமுக 34 சதவீத வாக்குகளை பெறும் .திமுக கூடுதலாக 4 சதவீத வாக்குகளையே பெற முடியும். மக்கள் நீதி மய்யம் 6 சதவீதம் ,நாம் தமிழர் 4 சதவீதம் வாக்குகளை பெறும் .இது அதிமுகவின் வாக்கு வங்கியில் இருந்து பெறப்படுகின்ற வாக்குகளே!
தென்மாவட்டங்களில் திமுக வலிமையுடன்தான் இருக்கிறது.
அதிமுகதான் சரிவை சந்திக்க நேரிடும். கமல்ஹாசன் 6.40 சதவீதம் ,நாம் தமிழர் 7.61 சதவீதம் பெறுவதால் அதிமுக 24.58 சதமும் ,திமுக 35.90 சதமும் பெறும் .
பொதுவாக திமுக கோட்டை 42.93 சதமுடன் வலிமையுடன் இருக்கிறது.எவ்வித சேதாரமும் இல்லை.
அதிமுக 32.96 சதம் பெறலாம். கூட்டணி கட்சிகளால் எந்தவிதமான லாபமும் இல்லை என்கிறது ஆய்வு.












