
விஷால் பிஜேபியில் சேரப்போகிறார் என்று வந்த வதந்தி நெருப்பில்லாமல் வந்தது அல்ல.
விஷாலும் பிஜேபியை சேர்ந்த காயத்ரி ரகுராமும் ( டான்ஸ் மாஸ்டர்.) அண்மையில் சந்தித்து வெகுநேரம் பேசியிருக்கிறார்கள். ஒரு மலை பிரதேசத்தில் இவர்களின் சந்திப்பு நடந்திருக்கிறது என்கிறது நமக்கு வந்த தகவல். இந்த செய்தி ஒரு பக்கம் பரபரப்பு கூட்ட மற்றொரு பக்கம் ஷூட்டிங்கிற்கு வராமல் விஷால் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதாக மற்றொரு செய்தி மண்டையிடியாக வந்திறங்குகிறது.
இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி. இந்த படத்திற்கான படப்பிடிப்பு துபாயில் நடந்தது.
முன்னர் ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கின் போது 3 நாட்கள் ரூமுக்குள்ளேயே கிடந்தார் வெளியில் தலை காட்டவில்லை என்பதாக சொன்னார்கள்.
அப்போது அதற்கு வேறு ஒரு காரணமும் சொன்னார்கள். பாலாவின் படத்தில் நடித்த போது மாறு கண்ணனாக நடிக்க வேண்டியதிருந்தது. படம் முழுவதும் கடுமையான ரிஸ்க் எடுத்து நடித்தார் .அதன் விளைவாக அவருக்கு இன்று வரை கண்ணில் கடுமையான வலி இருந்து வருகிறது. அப்படி வலி வரும் போது உயிர்போவது போல துடிப்பார் .இதனால் வெளியில் வருவதில்லை என்கிறார்கள்.
தற்போது துபாயில் நடந்த ‘எனிமி ‘படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்திருக்கிறார். இதனால் இயக்குநர் ஆனந்தசங்கர் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். தயாரிப்பாளர் வினோத்துக்கு ரத்தம் அழுத்தம் கூடுதலாகி விட்டது என இப்படியெல்லாம் தகவல்கள் வரத்தொடங்கியிருக்கின்றன.இதற்கான காரணம் தெரியவில்லை.
பத்து நாட்களே படப்பிடிப்பு நடத்த வேண்டியதிருக்கிறது. நடத்தி முடித்து விட்டால் படமே முடிந்து விடும் ஆனால் விஷால் எடக்கு பண்றாரே என்கிற முணுமுணுப்பு கேட்காமல் இல்லை. பிஜேபியில் சேரப்போவதால் இப்படியெல்லாம் பிரச்னை பண்ணுகிறாரோ என்னவோ? தீவிர அரசியல் என்றால் இப்படியெல்லாம் நடக்குமா?












