
தலைவர் கெத்துன்னா கெத்துதாங்க. மூணு மாத ரெஸ்ட் செமையா ஒர்க் பண்ணிருக்கு.!
பழைய தெம்பு ,உற்சாகம் ,ஆர்வம் பொங்க ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு ரஜினிகாந்த் தனி விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்றுவிட்டார் .
கடந்த டிசம்பரில் 45 நாள் ஷெடியூல் கணக்குப் போட்டு படப்பிடிப்புக் குழு கிளம்பிச்சென்றது. ஆனால் படப்பிடிப்பு குழுவில் 12 பேருக்கு கொரானா.
தலைவருக்கு உடல் நலம் பாதிப்பு.( அது யாருங்க தலைவர் என்று யாரும் கேட்டு விடக்கூடாது. பிரதமர் மோடியே ரஜினியை தலைவர் என்று சொன்னபின்னர் வேறு யார் பட்டம் சூட்டவேண்டும்?)
மருத்துவமனையில் ரஜினியை சேர்த்து விட்டு மொத்த படப்பிடிப்புக் குழுவும் சென்னை திரும்பி விட்டது .
சில நாட்கள் ரஜினிக்கு மருத்துவமனையில் சிகிச்சை.பின்னர் சென்னை திரும்பியவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு ஓய்வு எடுத்தார் .மூன்று மாத ஓய்வு .
உடல் நலம் முழுமையாக தேறிய நிலையில் மறுபடியும் ஹைதராபாத் ராமோஜிராவ் படப்பிடிப்பு நகரத்துக்கு இன்று சென்று இருக்கிறார்.
அவருடன் இரண்டு டாக்டர்களும் சென்று இருக்கிறார்கள் .ஏனென்றால் மறுபடியும் கொரானா கொள்ளை தொற்று பரவத் தொடங்கி இருக்கிறது.
25 நாட்களில் படப்பிடிப்பினை முடிக்கத் திட்டமிருக்கிறார்கள்.
அநேகமாக தேர்தல் ரிசல்ட் தெரிந்த பின்னர்தான் சென்னைக்கு வருவார் என்று சொல்கிறார்கள்.
யார் வெற்றி பெறுவார் என்கிற கள நிலவரம் அவருக்குத் தெரியுமா?
“இவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்கிற அரசு கணிப்பு அவருக்கு தெரியாமல் இருக்குமா?.
அதெப்படி தெரியாமல் போகும்?












