
காசிக்குப் போயும் அங்கு களவாணிப்பய காலில் விழுந்த கதையாகிப்போச்சு .!
சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் விஜய் 65 என்கிற தற்காலிக பெயரில் ஷூட்டிங் நடக்கிற சங்கதி எல்லோருக்கும் தெரியும்.
நெல்சன் திலீப்குமார் டைரக்சன் .விஜய்க்கு இணையாக பூஜா ஹெக்டே .மனோஜ் பரமஹம்சா கேமரா,அனிருத் இசை என திரையுலக பெரிசுகள் பங்கேற்றிருக்கிறார்கள்.
ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து ஜார்ஜியாவில் ஷூட்டிங் நடக்கிறது. 100 பேர் வரை இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய யூனிட்தான் .!
கொரானா காலம் என்பதால் அனைவர்க்கும் சோதனை செய்தபிறகுதான் விமானம் ஏற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் .விமானம் சென்றடைந்த பின்னரும் அந்த நாட்டு அதிகாரிகள் சோதனை செய்திருக்கிறார்கள்.
ஆனால் விதியை வெல்ல யாரய்யா இருக்கிறார்கள்.?
ஒளிப்பதிவு உதவியாளர் ஒருவர் உள்பட இருவர்க்கு கொரானா தொற்று ! உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.
அதிர்ச்சியாக இருந்தாலும் கடுமையான பாதுகாப்புகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.ஏப்ரல் முழுவதும் அங்கேயாதான் இருப்பார்கள் என்கிறார்கள்.
காற்றுவாக்கில் வந்த செய்தியை சொல்லணும்னு தோணுச்சு !












