
பிரதமர் மோடியின் அரசு மீதும் பிஜேபி தலைமையின் மீதும் கடுமையான குற்றச் சாட்டுகளை சொல்லிவருகிறவர் நடிகர் சித்தார்த். அண்மையில் உபி முதல்வர் ஆதித்யநாத் மீது கொரானா நோய் தொடர்பாக சில குற்றச்சாட்டுக்குகளை சொல்லிவந்தார்.
“ஆக்சிசன் இல்லை ,பற்றாக்குறை என்பதாக சொல்கிற மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் “என்பதாக குறை சொல்கிற மருத்துவமனைகளை அவர் மிரட்டியிருந்தார் .இதற்கு சித்தார்த் “ஓங்கி அறை விழும் “என்பதாக டிவீட்டி இருந்தார்.
சித்தார்த் தமிழ் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
” தமிழகத்தில் இருக்கிற பிஜேபி தலைவர்கள் ,அந்த அமைப்பின் ஐ.டி .செல் குழுவினரால் எனது தொலைபேசி எண் லீக் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் 500 அழைப்புகளுக்கு அதிகமாக எனக்கும் ,என்னுடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் ,ஆபாச வசவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்தனை மிரட்டல்களும் பிஜேபி தொடர்புடையவர்களுடையது .போலீசில் இதை கொடுத்திருக்கிறேன்.
இந்த மிரட்டல்களினால் என்னை அடக்கிவிடமுடியாது. நான் எனது கருத்துக்களை தொடர்ந்து சொல்வேன்.”என்பதாக சித்தார்த் கூறி இருக்கிறார்.












