
இந்தியன் 2 பட விவகாரம் இன்னும் முடிவடையவில்லை.
தயாரிப்பாளர்களுக்காக மூன்று சங்கங்கள் இருந்தும் லைகா -ஷங்கர் இடையேயான தகராறை தீர்த்து வைக்க முடியவில்லை என்பது உலக மகா சோகம். இந்த சங்கங்கள் எதற்காக இயங்குகின்றன என்பது புரியாத புதிராக இருக்கிறது.
தயாரிப்பாளரும் இயக்குநரும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்று நீதி மன்றம் அறிவுறுத்தியது. உலகநாயகன் கமல்ஹாசன் சமரசம் பேசுவதாக முன் வந்தார். ஆனாலும் சண்டை முடிவுக்கு வரவில்லை.
தற்போது ஷங்கர் இந்தியிலும் தெலுங்கிலும் படம் பண்ணவிருக்கிறார். அதற்கான அறிவிப்புகளும் வெளியாகின.
இந்த நிலையில்தான் இந்தி ,தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு லைகா நிறுவனம் கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறது.
“ஷங்கரை படம் இயக்குவதற்கு அனுமதிக்காதீர்கள். எங்களிடையேயான பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை” என்பதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.












