
பிரேமம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடிய படம்.
அல்போன்ஸ் புத்தி ரன் இயக்கத்தில் நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தது.
தற்போது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார், அதில் ஃபஹத் பாசில் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள்.
இப்பட பணிகள் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் இயக்குனர் அல்போன்ஸ்புத்திரன் தற்போது, தனது முகநூலில் ரசிகர்களுடனான உரையாடலின் போது, ஒரு ரசிகர் ரஜினிகாந்த் குறித்த விடுத்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்திய சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ரஜினிகாந்துக்கு மிகவும் பொருத்தமான கதை தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் “பிரேமம் பட வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்தை சந்திக்க முயன்றேன். ஆனால் வாய்ப்பு கிடைக்காததால் அவரை இதுவரை சந்திக்க முடியவில்லை என்றும், விரைவில் சூப்பர்ஸ்டாரை கண்டிப்பாக இயக்குவேன் என்று நம்புகிறேன்.அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளேன். கடவுள் விரும்பினால், மீதமுள்ள பணிகள் முடிந்துவிடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.












