
ஆந்திராவில் தங்களுக்கென தனி மார்க்கெட் வைத்துக்கொண்டிருப்பவர்கள் சூர்யா அண்ட் கார்த்தி பிரதர்ஸ். ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இவர்களது திரைப்படங்களை வெளியிடுவதற்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன.
இவர்களை தொடர்ந்து தெலுங்கு பிரதேசத்தில் நடிகர் விஜய்க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபள்ளிஎன்பவர் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
படத்தயாரிப்பாளர் தில் ராஜு. இவர் தன்னுடைய பிடிக்குள் பல தியேட்டர்களை வைத்துக்கொண்டு தெலுங்கு நடிகர்களையே மிரட்டிக்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.இவர் விஜயை வைத்து தயாரிக்கிற படம் பல மொழிகள் பேசும் என தெரிகிறது.












