
விஜய் தெலுங்கு படத்தில் நடிக்கப்போகிறார்.பிரமாண்டமான தயாரிப்பு என்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
தில் ராஜு தயாரிப்பு ,வம்சி இயக்குநர் என்றெல்லாம் கோலிவுட்டில் அடிபட்டது. டோலிவுட்டில் அவ்வளவாக செய்திகள் பெரிய அளவில் வரவில்லை.ஆனால் இயக்குநர் வம்சி ஒரு பேட்டியில் விஜய் நடிக்கப்போவது பற்றி சொல்லியிருந்தார்.
தற்போது நெல்சன் இயக்கும் சன் பிக்சர்ஸ் படத்தில் விஜய் நடிக்கிறார். கொரானா லாக்டவுன் முடிந்ததும் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்கிவிடும்.
வம்சியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பாரா என்கிற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. முழுக்கதையையும் சொல்லாமல் மையக்கதையை சொல்லிவிட்டு அதை எப்படி எடுக்கப்போகிறோம் என்பதை மட்டுமே சொல்லியிருந்தார் என்கிறார்கள்.
இது விஜய்க்கு பிடிக்கவில்லை.முழுக்கதையும் சொல்லாமல் வம்சி பேட்டி அளித்திருந்தது விஜய்யின் அதிருப்திக்கு காரணம் என்கிறார்கள்.
இதனால் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடிக்கமாட்டார் என்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் ,சமரச முயற்சிகள் வெற்றி பெறுமா?












