
‘ஓ மை கடவுளே’ படத்தை தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் ஏற்கனவே உருவாகி வந்த ’ஹாஸ்டல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. ஆர்.ஏ.கார்த்திக் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வனுடன் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்த ரிது வர்மா ’சூரரைப்போற்று’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி மற்றும் டாக்டர் ராஜசேகர் மகள் சிவாத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
இம் மூவரில் அசோக் செல்வனுக்கு ஜோடி யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு.இப் படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும், கோபி சுந்தர் இசையமைத்தும் வருகின்றனர்.












