
உடல் நலிந்த நிலையில் நயன்தாராவின் தந்தை குரியன் கொடியத்து இருப்பதாக சொல்லப்படுகிறது…
உயர் நிலை சிகிச்சை அளித்தும் பலனில்லை என்கிறார்கள். குரியன் இந்திய விமானப்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.
சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கலாமா ,அல்லது கொச்சியில் வைத்து சிகிச்சை அளிக்கலாமா என்கிற மனப்பான்மையுடன்தான் அடிக்கடி தனி விமானத்தில் சென்று தந்தையை பார்த்து வந்திருக்கிறார் நயன்தாரா என்கிறார்கள் .
இதனால் நயன்தாரா மிகுந்த மனா உளைச்சலில் இருக்கிறார் என்கிறார்கள். 
விரைவில் திருமணம் செய்து கொண்டு தந்தையை மணக்கோலத்துடன் பார்க்க வேண்டும் என்கிற ஆசை நயன்தாராவின் அம்மாவுக்கு இருக்கிறது.
ஆனால் சிரியன் கிருத்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பது பிரச்னை என்கிறார்கள்.
நயன் மதம் மாறியதால்தான் காதலர் விக்னேஷ் சிவனுடன் இந்து கோவில்களுக்கு சென்று வணங்கி வந்திருக்கிறார். அதனால் இந்து முறைப்படிதான் திருமணம் செய்து கொள்ள முடியும். 
அல்லது சிரியன் கிருத்துவ பாதிரியார்களின் ஆலோசனை பெற்று சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள முடியுமா என ஆலோசித்து வருகிறாராம்.
எது எப்படியோ அம்மாவே விக்னேஷ் சிவனை மருமகனாக ஏற்றுக்கொண்ட பிறகு மாமனார் மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ன?
காலம் தாழ்த்தாமல் மணமக்களாக சென்று குரியன் கொடியத்துவிடம் ஆசீர் பெறுங்கள்.!












