
நடிகர் தனுஷுக்கு தனியாக கட்சி நடத்துகிற அளவுக்கு ரசிகர்கள் பலம் இருக்கிறது.
நடிப்பு ,நடனம் ,சண்டை என இவருக்கென ஒரு பாணி இருக்கிறது. இவரது வளர்ச்சி குறிப்பிட்ட ஒரு நடிகருக்கு சரியான போட்டி என்பதாக திரை உலகத்தினர் பேசுகிறார்கள்.
இவரது அண்ணன் செல்வராகவனுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இவரும் ,தம்பி தனுஷும் இணைகிற படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அதற்காக ‘நானே வருவேன்’ என்கிற தலைப்பில் ஒரு படம் தயாராகிறது. யுவன் சங்கர் ராஜா தான் இசை. அண்மையில் வெளியாகிய இந்த படத்தின் போஸ்டர் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.
எரிகிற கட்டிடங்களின் பின்னணியில் தனுஷ் சுருட்டு பிடிப்பது போன்று வெளியான அந்த போஸ்டர் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படி சுருட்டு பிடிப்பது போன்ற காட்சியில் தனுஷ் நடிக்கலாமா என வழக்கமாக விளம்பரம் தேடுகிறவர்கள் கூட அமைதியாக இருந்து விட்டார்கள்.
ஆனால் இந்த சுவரொட்டி ஆங்கில ஆல்பத்தின் ( ஹாட் பாய் ) நகல் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதனால்தானோ என்னவோ தற்போது ‘நானே வருவேன்’ டைட்டிலை மாற்றுகிற எண்ணத்தில் இயக்குநர் இருப்பதாக ஒரு தகவல் வெளி வந்திருக்கிறது.
இது பற்றிய விளக்கம் அல்லது மாற்றம் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.பார்க்கலாம்.












