Friday, September 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சூரரைப் போற்று இந்திக்கு போவது ஏன் ? சூர்யா விளக்கம்.!

admin by admin
July 12, 2021
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.

You might also like

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

அப்போலோ மருத்துவமனை திட்ட இயக்குநராக ராம்சரண் மனைவி உபாசனா நியமனம் !

மாறா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாப்பாத்திரமாகவே சூர்யா அந்தப்  படத்தில் வாழ்ந்திருந்தார். . ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே சூரரைப் போற்று என கொண்டாடப்பட்டது.இது உண்மையாக நிகழ்ந்தவையின் ஒரு துளி எனலாம். ஏர் டெக்கான் தோற்றம் பற்றிய பதிவு .

 78வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில் பத்து இந்திய மொழி திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டன. அதில் சூரரைப் போற்று திரைப்படமும் ஒன்று. மேலும் 93வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான போட்டியிலும் ‘சூரரைப் போற்று’ திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IMDB தளம் தொடங்கப்பட்ட கடந்த முப்பது ஆண்டுகளில் 9.1 சதவீதம் அளவிற்கு அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஒரே இந்திய மொழித் திரைப்படம் ‘சூரரைப் போற்று’ மட்டுமே. ‘சஷாங் ரிடம்ஷ்ன்’, ‘காட் பாதர்’ என்ற உலகத் திரைப்பட வரிசையில் மூன்றாவதாக ‘சூரரைப் போற்று’ இடம்பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், பிரம்மாண்டத் தயாரிப்பாக இந்தியிலும் வெளிவர இருக்கிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க, நடிப்பில் தேர்ந்த பிரபலமான நடிகர் நடிகையர் நடிக்க இருக்கிறார்கள்.

சூரரைப் போற்று இந்தி திரைப்படத்தை: சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தி ரீமேக் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில், “சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் கேட்டது முதலே இது தென்னக ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஏனெனில் அந்தக் கதையில் ஜீவன் அத்தகைய வலிமை வாய்ந்ததாக இருந்தது.

உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில் தயாரிப்பதும், தரமான படங்களை தொடர்ந்து தந்துவரும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது” என  தெரிவித்தார்.

இந்த படத்தின் நிஜ, நாயகரான கேப்டன், ஜி.ஆர்.கோபிநாத் குறிப்பிடும்போது, “படத்தின் இயக்குநர் சுதா ‘என் கதையைச் சொல்ல வேண்டும்’ என்று என்னை அணுகியபோது நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை எப்படிச் செய்யவேண்டும் என்று அவருக்கு இருந்த அக்கறையும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணமும் என்னை ஒப்புக்கொள்ள வைத்தன..!

சிறுநகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தங்கள் கனவுகளைத் துரத்த குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. தற்போது இந்தி ரீமேக்கையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் “என்றார்.

அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, மக்களிடம் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மீது எங்களுக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு.!

பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு ஏதாவது தரவேண்டும் என்பதையே எங்கள் நிறுவன திரைப்படங்கள் எப்போதும் முயற்சித்து வருகின்றன. ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நிகழ்த்தியுள்ள மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களுக்கும் கொண்டு செல்வதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.! குறிப்பாக, சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் ஆகியோருடன் இணைவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது.!

இதுபோன்ற உயர்த்தரமான படைப்புகளை தொடர்ந்து தந்து ரசிகர்களை மகிழ்விப்போம் என்று நம்புகிறேன். இயக்குநர் சுதாவை இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக நாங்கள் மதிப்பிடுகிறோம். அவருடன் பணியாற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தக் கதையை உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு அவர் எப்போது தருவார் என்பதைப் பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Tags: அபர்ணா பாலமுரளிசுதா கொங்கராசூரரைப்போற்றுசூரியா
admin

admin

Related Posts

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!
News

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

by admin
September 24, 2026
வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’   3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!
News

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

by admin
September 24, 2026
அப்போலோ மருத்துவமனை திட்ட இயக்குநராக ராம்சரண் மனைவி உபாசனா நியமனம் !
News

அப்போலோ மருத்துவமனை திட்ட இயக்குநராக ராம்சரண் மனைவி உபாசனா நியமனம் !

by admin
September 24, 2026
‘ஓம்’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போனது ஏன்? – தனுஷ் விளக்கம்!
News

‘ஓம்’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போனது ஏன்? – தனுஷ் விளக்கம்!

by admin
September 24, 2026
ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில்,உருவாகும் ‘வயலெட் கனவு’!
News

ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில்,உருவாகும் ‘வயலெட் கனவு’!

by admin
September 24, 2026

Recent News

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’   3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

September 24, 2026
அப்போலோ மருத்துவமனை திட்ட இயக்குநராக ராம்சரண் மனைவி உபாசனா நியமனம் !

அப்போலோ மருத்துவமனை திட்ட இயக்குநராக ராம்சரண் மனைவி உபாசனா நியமனம் !

September 24, 2026
‘ஓம்’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போனது ஏன்? – தனுஷ் விளக்கம்!

‘ஓம்’ திரைப்பட வெளியீடு தள்ளிப்போனது ஏன்? – தனுஷ் விளக்கம்!

September 24, 2026
ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில்,உருவாகும் ‘வயலெட் கனவு’!

ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில்,உருவாகும் ‘வயலெட் கனவு’!

September 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?