
விமல்,ராஜ்கிரண், லட்சுமிமேனன் ஆகியோரது நடிப்பில், ராகவன் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான “மஞ்சப்பை” திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ராகவனே இந்த பாகத்தையும் இயக்குகிறார். வரும் அக்டோபர் மாதம் இப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
.நடிகர்கள் விமல் – ராஜ்கிரண் மீண்டும் இணைகின்றனர் மற்ற நடிகர்,நடிகைகள் குறித்தும் படத்தரப்பு பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












