
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கி வெளியான சார்பட்டா பரம்பரைபடம் ஆர்யா ,பசுபதி ஆகியோருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கிறது..
சமீபத்தில் நேரடியாக ஓடிடி.,யில் வெளியான இப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தனது அடுத்த படைப்பாக, புரட்சிகரமான ரொமான்டிக் காதல் கதை ஒன்றை ரஞ்சித் இயக்கி வருகிறார் .
இப் படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு கதாநாயகர்களை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் இளம் ஹீரோக்களான காளிதாஸ் ஜெயராம் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கின்றனர்.சார்பட்டா பரம்பரை பட நாயகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
மற்ற நடிகர், நடிகைகள், பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.இந்த புரட்சிகர காதல் கதை சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தலாம் என கிசுகிசுகிறது இயக்குனர் தரப்பு.












