
மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் “விக்ரம்” படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் முதல் முறையாக நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில் இப் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது . தொடங்கிய நாள் அன்று கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. விஜய்சேதுபதி ஐதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
மேலும் இப்பட த்துக்காக பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபியில் பிரமாண்ட அரங்கு ஓன்று அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு கமல், விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட ஜெயில் காட்சிகள் படமாக்கப்பட்ட உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பகத் ஃபாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவான ‘மாலிக்’ திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை பார்த்த கமல் உடனடியாக பகத் பாசிலை வரவழைத்து மனதார பாராட்டியுள்ளார்.அப்போது விக்ரம் படப்பிடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்துள்ளனர்.
அப்போது கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பகத்பாசில், ‘ஆரம்பிக்கலாங்களா’ எனவும் பதிவிட்டுள்ளார் இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.












