எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கிற படங்களில் இதுவும் ஒன்று ராதே ஷ்யாம், !யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி அதிக கவனத்தைப் பெற்று இருக்கிறது.
கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருப்பது, சூத்திரதாரியாக அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருப்பது, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பல மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள ராதே ஷியாம், 1970-களில் ஐரோப்பாவின் பின்னணியில் அமைந்துள்ளது. ராதே ஷ்யாமின் சிறப்பு முன்னோட்ட வீடியோவில் காணப்படுவது போல் மிகவும் புதுமையான மற்றும் வித்தியாசமான கதைக்கருவோடு படம் உருவாகியுள்ளது.
பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மார்ச் 11, 2022 அன்று திரைக்கு வரவுள்ள பன்மொழிப் படமான ராதே ஷ்யாமை, ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.
*












