
நடிகர் -நடிகையரின் வாழ்வில் அதிசயங்கள் , ஆச்சரியங்கள் ,ஏமாற்றம் இவையெல்லாம் சாதாரணம்.
அப்படியொரு விபத்து சமந்தாவுக்கும் நிகழ்ந்தது. தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்வு மணமுறிவு என்கிற பள்ளத்தில் வீழ்ந்தது.
எழ முடியுமா என்கிற நிலை.
“என்னால் முடியும்” என்கிற உறுதியுடன் கவர்ச்சியை நாடினார். கை கொடுத்தது.!திருப்பு முனையாக இருந்தது. முன்னிலும் அதிக ஊதியம் கிடைத்தது.
இதோ மறுபடியும் நாயகியாக நடிக்கிற வாய்ப்பு .
தளபதி விஜய்யுடன் இணை சேருகிறார் .அதற்கான முயற்சிகளில் ஜெகதீஸ் இறங்கியிருக்கிறார் என்கிற செய்தி கோலிவுட் வட்டாரங்களில்!
விக்ரமின் வரலாற்று வெற்றியில் பங்கு பெறுகிற இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சமந்தா நடிக்கப்போகிறார் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. தளபதி விஜய்க்கு படம் பண்ணப்போகிறார் அதில் சமந்தாதான் நாயகி என்கிறார்கள்.
இது உண்மையாகக்கூடும் ! சரி நம்பிக்கைதானே வாழ்க்கை.!












