இப்போதெல்லாம் நல்ல படங்களின் வரத்து அதிகமாகி விட்டது அமேசான் ஓடிடி தளத்தில்.!
பெரியப்படங்கள் அதாவது 50 கோடிகளுக்கு மேலான பட்ஜெட் படங்கள்தான் பெரிய திரைக்கு வரக்கூடுமென்கிற நிலையை சினிமாக்காரர்கள் உருவாக்கிவிட்டார்கள்.
இதுதான் காலத்தின் சுழற்சி .
ஓடிடிக்கு வருகிற சுழல் ..இதன் மையப்புள்ளி எங்கிருக்கிறது என்பதை கண்டு பிடிக்கிற மர்மப் படமாகவே இருக்கும் போலிருக்கிறது.டிரெய்லரைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம் வெளியான இரண்டு நாட்களில், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு இயங்கு தளங்களிலும் 50 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர் இன்றைய சூழலில் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் புலனாய்வு நாடக படைப்புகளில் ஒன்றாகும்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த தொடரின் முன்னோட்டம், அனைத்து மொழிகளிலும், இயங்குதளங்களிலும் உலகளவில் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
முன்னணி நடிகர்களான பார்த்திபன் ,சந்தான பாரதி ,ஐஸ்வர்யா ,கதிர்,
இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள் ஜூன் 17-அமேசான் தளத்தில்பார்க்கலாம்.புஷ்கர் -காயத்ரியின் சுழல் இது.!












