
அனிருத் ,தனுஷ் உள்பட சிலருடன் நெருக்கமுடன் படம் எடுத்துக்கொண்டு விவாதப் பொருளானவர் டி டி எனப்படுகிற திவ்யதர்ஷினி. விவாகரத்து பெற்றவர்.சுதந்திரமாக முடிவெடுப்பவர். ஆங்கராக பெயர் பெற்றவர்.
இன்றைக்கும் விஜய் டி.வியில் கொடி கட்டி பறக்கிறவர்.
இவர் தனது இன்ஸ்ட்டாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் நெருக்கமாக இருக்கிற படங்களை வெளியிட்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணத்துக்கு வந்திருந்த ஷாரூக்கை டிடி சந்தித்திருக்கிறார் .
“நான் அவரை டைட்டாக அணைத்துக்கொண்டேன்.ஒவ்வொரு நாளும் உங்களின் மகிழ்ச்சிக்காக நான் பிராத்தனை செய்கிறேன்.”என்பது போன்று சொல்லியிருக்கிறார்.












