
சாய் பல்லவி .சிறந்த நடிகை .தமிழ்ப்பொண்ணு.
தனது திறமையினால் அண்டை மாநிலங்களின் ஆதரவைப்பெற்று அங்கும் முதலிடத்தில் இருக்கிறவர். மாநில விருதுகளை அள்ளியவர்.
தெலுங்கில் ‘விராட பருவம்’ படத்தில் பாராட்டுகளை அள்ளியவர்.இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் படுத்து உருளாவிட்டாலும் மக்களின் ஆழ் மனதில் பதிந்து விட்டவர்.
இவரது கார்கி தமிழ்ப் படத்தில் ஒருமனதாக பாராட்டுகளையும் ,வாழ்த்துகளையும் பெற்றவர் சாய் பல்லவி. கார்கி கேரக்டருக்கு உயிர் கொடுத்தவர். இவருக்கு ஒன்றிய ,மாநில அரசுகளின் விருதுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது.
தேசிய விருது இவருக்குத்தான் என்கிற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.
ஆனால் இவர் தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியினால் விருதுக்கு தடைக்கற்கள் .
பாஜகவினர் சாய் பல்லவிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் .இதனால பாஜக அரசு விருது வழங்குமா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது.
அடடா ..அரசு விருதுகளுக்கு மக்களே பரிந்துரைத்தாலும் பாஜகவின் சிபாரிசு இல்லாவிட்டால் எதுவும் கிடைக்காது என்கிற நிலை இருக்குமானால் ,
நீதி, நியாயம் ஆகியவை கண் காது வாய் அத்தனையும் கட்டப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்! வாழ்க ஜனநாயகம்.!!!












