Monday, July 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“இலங்கையில் வைபவ் பார்த்த அடர் மஞ்சள் பேய்.!

admin by admin
July 29, 2022
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பத்திரிகையாளர்களை ‘நான்-வெஜ் ‘அயிட்டங்களால் திணற ,திணற அடித்தவர்களின் தயாரிப்புதான் ‘காட்டேரி’ . ஞானவேல் ராஜாவின் படைப்பு.

You might also like

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில் உருவான ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். பேய் ,ஆவி சமாச்சாரங்களை வைத்து பணம் பண்ணியவர்கள் அடுத்த ஆவியை அல்லது பேயை எப்போது எறக்கலாம் என காத்திருக்கிற வேளையில் காட்டேரி வரவிருக்கிறது.

 இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும்  ‘காட்டேரி’ யை  ஸ்டுடியோ கிரீன்  சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும்  திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

 தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.” திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருந்தது. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

 அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன்.”என்றார் .

இயக்குநர் டீகே பேசுகையில், ” இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்.

படத்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர் நான் கேட்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் அவர் ஒரு பட்ஜெட்டையும் நிர்ணயித்தார். படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் அனைவரும் எனக்கு புதிது. நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாக தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார். .” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், ” சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.

படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் டீகே பேயாக உழைத்தார். படப்பிடிப்பு நடைபெற்ற சில இடங்களில் அங்கு நிலவும் பருவநிலை எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரியாக மான்சி என்றொரு நடிகை நடித்திருந்தார். அவரும் நேர்த்தியாக ஒத்துழைப்பு வழங்கினார்.” என்றார்.

நடிகர் வைபவ் பேசுகையில்,” தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் பெரிய படம் செய்கிறோம் என்றார். ஆனால் இத்தனை நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இந்த படத்தில் இயக்குநர் டீகே மூலம் நிறைவேறியது. .

நடிகை வரலட்சுமி தற்போது மெலிந்து விட்டார். அவருடைய பேச்சும் தற்போது நிதானமாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடக்கத்தில் அவர் வேகமாக பேசுவார். எனக்குப் புரியாது. அதனால் தற்போது பல விசயங்கள் மாற்றம் அடைந்திருக்கிறது. இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் இருள் சூழ்ந்த நேரத்தில் வரலட்சுமி ஒரு அடர் மஞ்சள் நிற சேலை உடுத்தி வந்தவுடன் பயந்துவிட்டேன். .” என்றார். 

ஏம்பா வைபவ்,மஞ்சள் டிரஸ்தான் போடுமா,பேய் ?

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், ” காட்டேரி படத்துடன் நான்காண்டு கால அனுபவம் எனக்கிருக்கிறது. என்னுடைய மனைவிக்கு பிறகு நீண்ட செய்தியை அனுப்புவது இயக்குநர் டீகே தான். அதில் ‘உங்களுக்கு நல்ல நேரமே என்னுடைய படத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்’ என்பது கூட இருக்கும். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நல்ல நேரம் தொடங்கிய பிறகுதான் இந்த ‘காட்டேரி’ வெளியாகிறது. 

டிஜிட்டல் தளங்கள் அறிமுகமாகி, பிரபலமான பிறகு ரசிகர்கள் நாங்கள் ஏன் திரையரங்கிற்கு சென்று படத்தை ரசிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். ‘கே. ஜி. எஃப்’, ‘விக்ரம்’ போன்ற பிரம்மாண்டமான தயாரிப்புகள், பிரம்மாண்டமான படைப்புகள் மூலம் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து, ரசிக்க வைத்தனர். அது போன்றதொரு சூழலை குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘காட்டேரி’யும் உருவாக்கி இருக்கிறது.”என்றார் .

 

Tags: ஆத்மீகாகாட்டேரிஞானவேல்ராஜாடீகேயுவராஜ் பி.ஆர்.ஓவரலடசுமி சரத்குமார்வைபவ்
admin

admin

Related Posts

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில்  உருவான  ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!
News

ஜிவி பிரகாஷ் , சீனு ராமசாமி கூட்டணியில் உருவான ’இடிமுழக்கம்’ ! லிரிக்கல் வீடியோவெளியானது!

by admin
July 26, 2026
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும்  “பிரஜாபதி” !
News

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

by admin
July 26, 2026
‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!
News

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

by admin
July 26, 2026
மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!
News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

by admin
July 26, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

by admin
July 25, 2026

Recent News

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும்  “பிரஜாபதி” !

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “பிரஜாபதி” !

July 26, 2026
‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

‘ஹிப்ஹாப் தமிழா’வின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 ல் வெளியாகிறது!

July 26, 2026
மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 26, 2026
‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

‘சிட்டுக்குறிஞ்சி’ டப்பிங் பணிகள் தொடங்கியது!

July 25, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?