
ரகுல் ப்ரீத் சிங். பாலிவுட் பறவை. இந்தியன்.2 -ல் இணைந்திருக்கிற நடிகை. துணிச்சல்காரி.!
கடந்த செப்டெம்பர் 3-ம் தேதி போதை பொருள் கடத்தல் தடுப்பு என்போர்ஸ்மென்ட் துறையினர் ரகுல் ப்ரீத் சிங்கை அழைத்து விசாரணை செய்தனர். திடீரென அந்த விசாரணை நிறுத்தப்பட்டது.காரணம் சொல்லாமல்.!
தற்போது 19- தேதி மறுபடியும் விசாரணை நடக்கிறது.ஆகவே தவறாமல் வரவேண்டும் என்று புதிதாக சம்மன் அனுப்பியிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கர் கவுட் நடத்திய போதை பார்ட்டியில் கலந்து கொண்டதாக பைலட் ரோகித் ஷெட்டிக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
2021 -ல் பெங்களூரு போதை பார்ட்டியில் 4 கோடி மதிப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கையில் சிக்காமல் இருக்க சில சினிமா பிரபலங்கள் தமிழ்நாடு உட்பட பாதுகாப்பு தேடி பாஜகவில் இணைந்ததாக ஒரு தகவல் உண்டு.












