Monday, April 20, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஆர்யாவின் மனைவி ஸ்பெஷல் டான்ஸ்.பத்து தல அமர்க்களம்.

admin by admin
March 5, 2023
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது.

இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும் என்ற கம்பேரிசன் பயமாக உள்ளது. இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90% வேறாக கொடுத்திருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் மட்டும்தான் ஒன்றாக இருக்கும். சிலம்பரசன் சிறப்பாக நடித்துள்ளார். கெளதம் மேனன், கெளதம் கார்த்திக், ரெடின் கிங்ஸ்லி, கலையரசன், டிஜே அனைவருமே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான்  சிறந்த இசையை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஃபரூக், எடிட்டர் பிரவீன் என இவர்கள் எனக்கு பக்கபலம். எஸ்.டி.ஆர். படம் என்றாலே வசனம் தான் முக்கியாமனது. அது சிறப்பாக வந்துள்ளது. படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் உள்ளது.

You might also like

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

இதில் சாயிஷா ஆர்யா எக்ஸ்க்ளூசிவ்வான டான்ஸ்கொடுத்துள்ளார். அதற்கான படப்பிடிப்பு இப்போது போய்க் கொண்டிருக்கிறது.

நான் எது கேட்டும் ரஹ்மான் சார் நோ சொன்னதே கிடையாது. கடைசி நேரத்தில் அவர் ‘நம்ம சத்தம்’ லிரிக்கல் வீடியோவில் சிறப்புத் தோற்றத்தில் ஷூட் செய்து அனுப்பினார். அவரது அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். சிலம்பரசன் அவர்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் உள்ளதால் பாங்க்காக்கில் இருந்து டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தார்”.

தயாரிப்பாளர் ஈஸ்வர் பேசியதாவது, “இந்தப் படத்தை கன்னடத்தில் நான் பார்த்தபோது சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். கடைசியில் அவரே எங்கள் படத்தில் கிடைத்தது மகிழ்ச்சி. அவரது வளர்ச்சியில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே சிறந்த பணியைக் கொடுத்துள்ளனர். ரஹ்மான் சாரும் அவரது மகனும் கொடுத்துள்ள வீடியோ ரசிகர்களைப் போலவே எனக்கும் பிடித்திருந்தது. நாம் ஆதரிக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் என இவர்களைத் தாண்டி சாயிஷா ஆர்யா அவராகவே வந்து எங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியான விஷயம். கன்னடத்தில் உள்ள ‘மஃப்டி’ படத்தின் காப்பி இல்லை, எங்களது சொந்தப் படம் என்றால் நம்பும்படிதான் ‘பத்துதல’ எடுத்திருக்கிறார்கள். ரஹ்மான் சார் ஒரு திறமையுள்ள குழந்தை. கிருஷ்ணா சாரின் திறமைக்கு இன்னும் பல படங்கள் கிடைக்க வேண்டும்” என்றார்.

நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, “என் மனதில் இருந்த அனைத்தையும் பேசி விட்டார்கள். இந்த புராஜெக்ட்டின் இரண்டு வெர்ஷன்களிலும் நான் நடித்துள்ளேன். நிச்சயம் ‘மஃப்டி’ போல இருக்காது. எஸ்.டி.ஆர்ருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய ப்ளஸ். அவருடன் நிறைய ஃபேன் மொமண்ட் இருந்தது. சக்தி சரவணன் சார் எனக்கு ஆக்‌ஷன் காட்சிகளை சிறப்பாக சொல்லிக் கொடுத்தார். அவர் மேலும் வளர என் வாழ்த்துகள். என் சக நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். கிருஷ்ணா சார் முதலில் என்னை சந்தித்தபோது, ‘உன் கண்கள் ரொம்ப சாஃப்ட்டாக இருக்கு. அதிக கோபப்பட பழகிக்கோ’ என சொன்னார். அதை இப்போது வரை செய்து கொண்டிருக்கிறேன். படம் நிச்சயம் வெற்றியடையும்” என்றார்.

படத்தின் மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. படத்தின் அனைத்து பாடல்களும் பல நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதையும்  இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் லைவ்வாக பாடல்களை மேடையில் பாட உள்ளார்.

 

Tags: ஏஆர்.ரகுமான்கவுதம் கார்த்திக்சாயிஸா ஆர்யாசிலம்பரசன்டி ஒன்பத்து தல
admin

admin

Related Posts

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!
News

ரன்பீர் கபூர் – ஆலியா பட் நடித்த ‘லவ் & வார்’ ஜனவரி 2027ல் வெளியாகிறது!

by admin
April 19, 2026
‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’  வெளியானது!!
News

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

by admin
April 19, 2026
திருமணம் ஒரு  முற்றுகை இடப்பட்ட  கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!
News

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

by admin
April 18, 2026
விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட  போஸ்டர் !
News

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

by admin
April 18, 2026
விக்ரமின்  பிறந்தநாளில்  “சீயான் 63”  புதிய பட அறிவிப்பு!
News

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

by admin
April 18, 2026

Recent News

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’  வெளியானது!!

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

April 19, 2026
திருமணம் ஒரு  முற்றுகை இடப்பட்ட  கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

April 18, 2026
விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட  போஸ்டர் !

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

April 18, 2026
விக்ரமின்  பிறந்தநாளில்  “சீயான் 63”  புதிய பட அறிவிப்பு!

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

April 18, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?