முஸ்தபா ராஜ்.
பிரியாமணியின் காதல் கணவர்.இவர்களின் திருமணம் விமர்சிக்கப்பட்டது.
“ஒரு இஸ்லாமியரை கல்யாணம் செய்யலாமா ?”
“விவாகரத்து செய்” என்று அறிவுரை சொன்னார்கள் .சோசியல் மீடியாக்களில் விவாதப் பொருளாக்கப்பட்டது.
ஆனால் எதையுமே சட்டை செய்யவில்லை பிரியாமணி.
“என்னை விமர்சிக்கவோ ,எனது தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடவோ எவர்க்கும் உரிமை இல்லை.நாங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .இனிமேல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளிக்கு கொண்டு வரவேண்டாம்.” என்று சொல்லியிருக்கிறார் நடிகை பிரியாமணி.












