நடிகை ராதிகா ஆப்தே தனது நீண்ட நாள் காதலர் பெனெடிக்ட் டெயிலர் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்,திருமணமாகி கிட்ட தட்ட 12 ஆண்டுகள் கழித்து ராதிகா ஆப்தே, கடந்த அக்டோபர் மாதம் தான் லண்டன் திரைப்பட விழாவில் நேரில் வந்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.இதையடுத்து சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்து அதன் பாலினத்தை அவர் அடையாளப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தனக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ராதிகா.குழந்தைக்கு பாலூட்டிய படி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ராதிகாஆப்தே . தனக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதாக கூறி இருக்கிறார். இருப்பினும் தனக்கு பிறந்த குழந்தை ஆணா, இல்லை பெண்ணா என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை. அதே சமயம் அந்த புகைப்படத்தில் நடிகை ராதிகா ஆப்தேவின் நெருங்கிய தோழியான சாரா ஆப்சன்ஸ், “எனது சிறந்த பெண்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு குழந்தை பெற்றெடுத்துள்ள நடிகை ராதிகா ஆப்தே – பெனெடிக்ட் டெயிலர் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.












