உலகநாயகன் கமல்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கப்போகிற படத்தை ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது என்பது முடிவாகிப்போன செய்தி.
படப்பிடிப்பு நாட்கள் பற்றி எதுவும் முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் .அடுத்த ஆண்டு தீபாவளி அல்லது தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸ் என்று நம்பப்படுகிறது. கமல் ரஜினி இருவரும் நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் இணைவதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அண்மையில் பிரசாத் படப்பிடிப்பு அரங்கில் இரண்டு நாட்கள் படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் நடந்தது.
பிப் பத்தொன்பதாம் நாள் ஒரு போஸ்டர் எக்ஸ் தளத்தில் வெளியாகியது. இருபதாம் தேதி மதியம் இன்னொரு போஸ்டர் வெளியாகிறது.
டைட்டில், அல்லது நடிகர்கள் விவரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.பனிரெண்டு மணி அளவில் அதாவது சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் வெளியாகிறது என்கிறார்கள் . கமலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் ஏழு மணிக்கு போஸ்டர் வெளியானதாக ரசிகர்கள் நம்புகிறார்கள்.












