“நாட்டில் நடக்கிற கொடுமைகளை மக்கள் நீதி மய்யம் கண்டு கொள்வதில்லையா ? திமுகவுக்கு சொம்படிக்கிறாரா உலகநாயகன் ?”என்று கமலின் அரசியல் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் சிலர் அவ்வப்போது கேட்பது உண்டு.
அவர்களுக்கு பதிலளிக்கிற வகையில் என்று நினைத்துக் கொண்டாலும் சரி, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கமல்ஹாசன் தன்னுடைய நிலைபாட்டினை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த சில கோரங்களை ,கொடுமைகளை கண்டு பொங்கி இருக்கிறார். அரசுக்கு எடுத்துச்சொல்கிற வகையில் சற்றே கடுமையுடன் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
“கடுமை காட்டுங்கள் .எதிரிக்கட்சிகளின் வாய்களுக்கு இடம் கொடாமல் நடவடிக்கை எடுங்கள் !” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சொல்லியிருக்கிறார் என்றே தோன்றுகிறது . இதோ அவரது கருத்துகள்.
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது… இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”
சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது.
இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை.
எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.












