“மறைந்த தெலுங்கு நடிகர் காந்தாராவ் கத்தி சண்டையில் மிகவும் சிறந்தவர். அவரை பார்த்தால் எம்.ஜி.ஆர் பயந்து நடுங்கி விடுவார்” என ஐதராபாத்தில் நடந்த விழா ஒன்றில் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில்,தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது,” மறைந்த தெலுங்கு நடிகர் காந்தாராவ் காரு பெயரில் எனக்கு விருது வழங்கப்பட்டது.
அந்த விழாவில், தமிழ் சினிமா கடவுள் எம்ஜிஆர் பத்தி சும்மா ஜாலியா பேசும் போது தவறுதலா ஒரு வார்த்தை மிஸ் ஆகி வந்துருச்சு.அதை சிலர் வேண்டுமென்றே பெரிது படுத்தி விட்டனர்.
அதை ஏன் செய்தார்கள் என தெரிய வில்லை.அந்த மாதிரி நான் பேசுவேனா,அவர் எவ்வளவு பெரிய தலைவர் .
நான் சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும் போது அவர் தான் சி.எம்.அவர் நாங்க எல்லாம் எப்படி ஆக்டிங் கத்துக் கிறோம் என்பதை பார்த்தவரு . அவரை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஆள் இல்லை
இருந்தாலும்,தவறுதலாக வெளிப்பட்ட என் பேச்சு யாருக்காவது வருத்தம் ஏற்படுத்தி இருந்தா,என்னை மானிச்சுடுங்க இனிமே வாழ்க்கையில் எப்பவுமே நான் அப்படி பேசமாட்டேன். இந்த தப்பை தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள்.இதை இதோடு விட்டு விடுங்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












