நடிகை த்ரிஷா தற்போது மும்பையில் உள்ளார். கடந்த மார்ச் 13ஆம் தேதி சென்னையில் இருந்து மும்பைக்குச் சென்றவர் அங்கு இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.இது பெரும் சர்ச்சையானது.இது குறித்து மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த திரிஷாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்காமல் ஓ ட்டமும் நடையுமாக சென்று விட்டார் இது குறித்த வீடியோவும் இணையத்தை வைரலானது.
இந்நிலையில்,43 வயதாகும் முரட்டு சிங்கிளாக வலம்வரும் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண் போல காட்சியளிக்கும் தனது ‘செல்பி’ புகைப்படத்தைப் பகிர்ந்து, பூமாலையே தோள் சேரவா போன்ற பாடலைப் இணைத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக திரிஷாவுக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சு போல என கமெண்ட் போட்டு வருகிறார்கள். சமீபத்தில் விவாகரத்து கேட்டு விஜய் மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில்,விஜயுடன் ஜோடி சேர்ந்து,தம்பதிகள் போலஒரே உடையில் திருமண விழா ஒன்றுக்கு சென்றது பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.
திரிஷா மும்பை போனதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், நடிகை த்ரிஷா, நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது குழு உள்ளிட்ட பலருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த புகைப்படத்தில் திரிஷாவும் பார்த்திபன் மகளும் ஒன்றாக இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் பஞ்சாயத்து மொத்தமாக முடிஞ்சுருச்சு போலயே என்றும் பதிவிட்டு வருகின்றனர்












