90 களில்,கோலிவுட்டில் ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ என கலக்கியவர் ‘வாள மீனு’ ‘ மாளவிகா . ‘பூங்காற்றே’, ‘ரோஜாவனம்’, ‘வெற்றி கொடி கட்டு’, ‘திருட்டு பயலே’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில், திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் பிசியாக இருக்கும் போதே,திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு . முழுக்கு போட்டது ஏன்? என்பது குறித்து தற்போது மாளவிகா கூறியுள்ளதாவது,” நான் சினிமாவை விட்டு விலகுவேன் என நினைக்கவே இல்லை. ஆனால் சினிமாவை விட்டு விலகும் படி ஆகிவிட்டது. நானும் என் கணவரும் நல்ல நண்பர்களாக தான் முதலில் பழகிக்கொண்டிருந்தேன். எப்போதும் நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். ஆனால், ஒருநாள் திடீரென அவர் என்னை காதலிப்பதாக கூறினார். இதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், நான் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், அடுத்த நாள், அவருக்கு ஃபோன் செய்து, உண்மையாகவே நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா என கேட்டேன்.அவர் உடனே இல்லை… இல்லை… சும்மா விளையாட்டுக்காக பேசினேன் என சமாளித்தார்.
அதன் பிறகு நானும் அவரும் ஒரு வருடம் டேட்டிங் பண்ணோம். அதன் பிறகு ஒரு நாள் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என நானே கேட்டேன். உடனே அவரும் ஆமாம் என சொன்னார். உடனே பெற்றோரிடம் சொல்லி நிச்சயதார்த்தமும் நடந்து, 2007ஆம் ஆண்டு திருமணமும் நடந்தது . திருமணத்திற்கு பிறகு தான் நிற்க கூட நேரமெல்லாம் மிகவும் பிசியாகி விட்டேன். அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருந்தன. ஆனால், திடீரென கர்ப்பமாகி விட்டதால் மூன்று படத்திற்கு வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்கப்படி ஆகிவிட்டது. நான் அதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்து விட்டதால் சினிமாவை விட்டு விலக வேண்டியதாகி விட்டது”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












