Thursday, October 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் !

admin by admin
August 12, 2025
in News
418 4
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும், ஒரு மிரட்டலான திரில் பயணமாக உருவாகிறது.  

படத்தின் தனித்துவமான ஈர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren), சோடா பாபுவாக (Soda Babu) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னணி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ( Sai Abhyankkar) இசையமைக்கிறார். துடிப்பு மிக்க இளம் திறமைகளின் பங்கேற்பில், “பல்டி” 2025 மலையாள சினிமா ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்தாக உருவாகிறது.

You might also like

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

2007ஆம் ஆண்டு,  நடிகர் மோகன்லாலுடன் நடித்த ஏஞ்சல் ஜான் (Angel John) என்ற திரைப்படத்தின் மூலம் சாந்தனு மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த படம், தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அவர் தமிழ் திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி,  வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்தார். வெகுகாலமாகவே அவரது மலையாள திரைப்படத்திற்காக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  

சாந்தனு தனது மலையாளக் கம்பேக்கைப் பற்றி கூறியதாவது:

“பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புவது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த படம் ஒரு புதிய அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்க சிறந்த கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.”

புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும், விளையாட்டு பின்னணியிலான அதிரடி திரில்லர் திரைப்படமான இந்தப் “பல்டி” படம்,  திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. STK ஃபிரேம்ஸ் மற்றும் Binu George Alexander Productions ஆகிய நிறுவனங்களின் சார்பில் சந்தோஷ் T. குருவில்லா (Santhosh T. Kuruvilla) மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் (Binu George Alexander) ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தின் அற்புதமான தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் தயாரிப்புக் குழு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரல் வெற்றிகளுக்குப் பெயர் பெற்ற இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது மலையாள சினிமாவில் அபயங்கரின் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பாடலாசிரியர் விநாயக் சசிகுமாருடனான அவரது கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“RDX: ராபர்ட் டோனி சேவியர்” திரைப்படத்தில் பணியாற்றியதற்காக பரவலாகப் பாராட்டப்பட்ட அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் J. புலிக்கல், இந்த நட்சத்திரக் குழுவில் இணைகிறார். இந்தப் படத்தை சிவகுமார் V. பணிக்கர் எடிட்டிங் செய்கிறார். ஷெரின் ரேச்சல் சந்தோஷ் இணை தயாரிப்பாளராகவும், சந்தீப் நாராயண் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்த படத்தில்  கிஷோர் புறக்காட்டிரி தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், ஸ்ரீலால் M தலைமை இணை இயக்குநராகவும் ஒரு வலுவான குழு உள்ளது. இணை இயக்குநர்களில் சபரிநாத், ராகுல் ராமகிருஷ்ணன், சாம்சன் செபாஸ்டியன் மற்றும் மெல்பின் மேத்யூ (போஸ்ட் புரடக்சன்) தயாரிப்பு) ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

admin

admin

Related Posts

’டோரதி’  எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!
News

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

by admin
October 14, 2026
உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும்  ‘ரேவன்’!
News

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

by admin
October 14, 2026
ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான  ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !
News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

by admin
October 14, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ்’!
News

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ்’!

by admin
October 13, 2026
2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !
News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !

by admin
October 13, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?