
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கமல் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இவில்லாவில் இயக்குனர் ஷங்கர் பேசுகையில்,”இன்றைய காலகட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்தியன் 2.படத்தின் கதை. இந்தியன் 1 படத்தை பொறுத்தவரை இப்படத்தின் கதை தமிழகத்திற்குள் நடப்பது போன்ற சம்பவங்களை கொண்டிருந்தது.ஆனால் தற்போதைய இந்தியன் 2, தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் பேசும் படமாக உருவாகியுள்ளது. . இந்தியன் 2 படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு. இந்த படம் உங்கள் ஒவ்வொருத்தரையும் யோசிக்க வைக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் சிறப்பாக வருவதற்கு முதல் காரணம் கமல்ஹாசன் தான். முதல் பாகத்தில் கூட 40 நாட்கள் தான் சிறப்பு வேடம் போட்டு கமல் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு தினமும் சிறப்பு வேடம் போட வேண்டி இருந்தது. மேக்கப் காரணமாக படப்பிடிப்பு துவங்கும் முன்பே வந்து, படப்பிடிப்பு முடிந்தும் எல்லோரும் புறப்பட்ட பிறகே கமல் சார் புறப்பட்டு சென்றார்.
அவரது மேக்கப்-ஐ போடுவதற்கும், அழிப்பதற்கும் 1 மணி நேரம் ஆகிவிடும். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல்ஹாசனை முதல்முறை பார்த்த போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அதே சிலிர்ப்பு 25 ஆண்டுகள் கழித்தும் அப்படியே இருக்கு. முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தாவின் மேக்கப் கமல்ஹாசனின் நடிப்பை முழுமையாக பார்க்க விடாமல் செய்தது. இந்தமுறை மேக்கப் சார்ந்த நுட்பங்கள் வளர்ச்சி அடைந்திருப்பதால், மிகவும் மெல்லிய செயற்கை சருமம் மேக்கப் ஆக போட்டிருக்கிறோம். இதனால், கமல்ஹாசனின் நடிப்பை கடந்த பாகத்தில் இருந்ததை விட இந்த பகாத்தில் அதிகளவில் பாரக்க முடியும். கமல்ஹாசனுக்கு எந்த மாதிரி சவால் கொடுத்தாலும், அவர் அதை சிறப்பாக செய்கிறார். அவர் நடிக்கும் காட்சியை படமாக்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பா இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான இசையை அனிருத் கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னோட நன்றி. படத்தில் ஒவ்வொரு டியூனும் 100 சதவீதம் ஓ.கே. சொல்லும்வரை திரும்ப திரும்ப செய்து கொடுத்தார். படத்தில் நடிகர் விவேக் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், இவ்வாறு அவர் பேசினார்












