Saturday, October 31, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ – விமர்சனம்!

admin by admin
October 31, 2026
in Reviews
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்டர்நேஷனல் போதைப்பொருள் கடத்தல், துரோகம், கேங்ஸ்டர் வேட்டை என ஆக்‌ஷன் த்ரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களைக் குறிவைத்து தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் பான்-இந்தியத் திரைப்படம் ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’.

அப்பாவின் கடன், மோசமான குடும்பச் சூழ்நிலை எனப் பணத் தேவையில் இருக்கும் நாயகன் சரண், குறுக்கு வழியில் ஒரே இரவில் கோடீஸ்வரனாக ஆசைப்படுகிறான். இதற்காகத் தனது உயிர் நண்பன் பால சரவணனின் உதவியோடு, கடத்தல் உலகின் தாதாவான ஜே.டி. சக்கரவர்த்தியிடம் வேலைக்குச் சேருகிறான். இருவரும் சேர்ந்து பல கடத்தல்களைச் வெற்றிகரமாகச் செய்து முடித்து அவனது நம்பிக்கையைப் பெறுகின்றனர்.

You might also like

‘சிங்காரம்’ – விமர்சனம்!

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

ஆனால், பேராசை காரணமாகச் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சர்வதேசப் போதைப்பொருளைக் கடத்தி, தங்களது முதலாளியான ஜே.டி. சக்கரவர்த்தியையே ஏமாற்ற ஒரு விபரீத திட்டத்தைத் தீட்டுகின்றனர் நண்பர்கள். இவர்களின் இந்தத் துரோகம், ஒட்டுமொத்த சர்வதேசக் கடத்தல் உலகிலும் பெரிய பூகம்பத்தைக் கிளப்புகிறது.

பெரும் நஷ்டத்தைச் சந்தித்த சர்வதேச மாஃபியா தலைவன் லால், ஜே.டி. சக்கரவர்த்தியைக் கொல்லத் தேட, தன்னை ஏமாற்றிய சரணையும் பால சரவணனையும் வேட்டையாட ஜே.டி. சக்கரவர்த்தி துரத்துகிறான். இந்த ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் கூண்டோடு பிடிக்கத் துணிச்சலான சுங்கத்துறை அதிகாரி சமய முரளி களம் இறங்க, அதன் பின் நடக்கும் திக் திக் ஆட்டமே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்துள்ள சரண், சண்டைக்காட்சிகள், காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்களில் கச்சிதமான நடிப்பைத் தந்துள்ளார். தான் செய்யும் தப்பை அம்மாவிடமும் காதலியிடமும் மறைத்து அவர் தவிக்கும் காட்சிகள் எதார்த்தம். நாயகி ஸ்மேஹா, தனது பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக, போலீஸ் ஸ்டேஷனில் சிக்கித் தவிக்கும் இடங்களிலும், அண்ணன் காளியை எதிர்த்துப் பேசும் காட்சிகளிலும் அவரது நடிப்பு பலம்.

படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு நடுவே, பால சரவணன் தனது ஒன்-லைனர் நகைச்சுவைகளின் மூலம் தியேட்டரில் ரசிகர்களைச் சோர்வடையாமல் பார்த்துக்கொள்கிறார். கடத்தலுக்கு உதவும் ஜாஃபெர் சாதிக் வரும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றன. ராதிகா அம்மாவாகத் தனது அனுபவ முத்திரையைப் பதித்துள்ளார். இவர்களுடன் சினேகா குப்தாவின் கவர்ச்சி நடனம் கமர்ஷியல் ரசிகர்களுக்குக் பக்காவான விருந்து.

இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலவீனம், சர்வதேச அளவில் பேசப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடத்தல் மற்றும் போலீஸ் விசாரணை காட்சிகள் சில இடங்களில் மிகவும் சாதாரணமாகவும், சற்றே சிறுபிள்ளைத்தனமாகவும் படமாக்கப்பட்டிருப்பதுதான். இந்த லாஜிக் மீறல்களை இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் சுவாரசியமாகவும் இயக்குநர் கையாண்டிருக்கலாம்.

இருப்பினும், போதை மாஃபியா கும்பலைச் சுங்கத்துறை அதிகாரி சமய முரளி தனது அசாத்திய திட்டங்கள் மூலம் வியூகம் அமைத்துப் பிடிக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒட்டுமொத்தக் குறைகளையும் மறக்கடிக்கச் செய்கின்றன. யாரும் எளிதில் யூகிக்க முடியாத வகையில் கிளைமாக்ஸில் வைக்கப்பட்டுள்ள அந்த ட்விஸ்ட் தியேட்டரில் ரசிகர்களைச் சபாஷ் போட வைக்கிறது. சில லாஜிக் குறைகள் இருந்தாலும், விறுவிறுப்பான கிளைமாக்ஸ் திருப்பங்களுடன் கேங்ஸ்டர் படத்தைக் கண்டு ரசிக்க விரும்பும் கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு, இந்த ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ திரைப்படம் ஒரு நல்ல என்டர்டெய்னராக இருக்கும்.

admin

admin

Related Posts

‘சிங்காரம்’ – விமர்சனம்!
Reviews

‘சிங்காரம்’ – விமர்சனம்!

by admin
October 31, 2026
‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!
Reviews

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

by admin
October 24, 2026
அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!
Reviews

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

by admin
October 24, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!
Reviews

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

by admin
October 24, 2026
‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

by admin
October 16, 2026

Recent News

‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

‘வேட்ட சாமி’ படத்தின் ‘சாமி அழைப்பு’ லிரிக்கல் வீடியோ வெளியானது!

October 31, 2026
சித்து – தர்ஷிகா நடிக்கும் ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) திரைப்படத்தின் தொடக்க விழா!

சித்து – தர்ஷிகா நடிக்கும் ‘தி லாஸ்ட் கேஸ்’ (The Last Case) திரைப்படத்தின் தொடக்க விழா!

October 31, 2026
‘வேட்டுவம்’  பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

‘வேட்டுவம்’  பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 31, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ :  ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

ஜீவாவின் ‘தகப்பன்’ : ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

October 30, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?