உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளில் எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் சண்டியர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரம் படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் மிரட்டலான (காருக்குள் ரத்தம் வலிய கமல்ஹாசன் வெளியே நிற்கும் காட்சியுடன் ‘சண்டியர்’ மாஸ் லுக் இணையத்தை கலக்கி வருகிறது.
விருமாண்டி படத்துக்கு முன்னதாக ‘சண்டியர்’ என கமல் டைட்டில் வைத்திருந்த நிலையில், அன்றைய அரசியல் சூழல் காரணமாக அந்த தலைப்பு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு விருமாண்டி என பெயரிடப்பட்டது. இந்நிலையில், சித்தா, வீர தீர சூரன் படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படத்துக்கு கமல்ஹாசன் தனக்கு மிகவும் பிடித்தமான சண்டியர் தலைப்பை சூட்டியுள்ளார் .அனிருத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்,இப்படத்தை கமல்ஹாசன் மகேந்திரன் இணைந்து தயாரிக்க,எஸ். டிஸ்னி இணைத்தயாரிப்பை ஏற்றுள்ளார்












