இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினருமான . கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளில்
இளம் இயக்குனர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

கமல்ஹாசனை வாழ்த்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் படப்பிடிப்புக்கு நேரில் வந்து கமல்ஹாசனோடு கேக் வெட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்.

தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் வன்னியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி ஆரூன், மனிதநேயம் அறக்கட்டளை சைதை துரைசாமி ஆகியோர் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தந்து உலகநாயகனை வாழ்த்தினர்.












