Friday, November 20, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ராஜேஷ்குமாரின் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘வயெலெட் கனவு’!

admin by admin
November 19, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘தகப்பன்’ பட 2 வது சிங்கிள் ‘சொக்க வச்சாளே’ பாடல் வெளியானது!

வெளி மாநிலங்களில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ‘பீட்சா பாய்ஸ்’

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் காதல் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், குறைந்த முதலீட்டில், அறிமுக இயக்குநர் மற்றும் நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில், கிரைம் நாவல் மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில், இயக்குநர் பி.நித்தியானந்தம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வயலெட் கனவு’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஹாலிவுட் எழுத்தாளர்களைப் போல் ஒரு திரைப்படத்திற்கு தேவையான சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்புடன் தனது நாவல்களை எழுதக்கூடிய திறன் படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமாரின், மிகவும் புகழ்பெற்ற நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டட இயக்குநர் பி.நித்தியானந்தம் D.F.T, திரை மொழியில் பார்வையாளர்கள் மிரளும் வகையில் ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார்.
அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் D.F.T மற்றும் ஏ.முஸ்தரி M.Sc., இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகிறது. 
படம் குறித்து இயக்குநர் பி.நித்தியானந்தம் D.F.T கூறுகையில், “ஆபாவாணன் சார், நான் எல்லாம் திரைப்பட கல்லூரியில் ஒன்றாக படித்தோம். பிறகு அவருடன் பணியாற்றினேன், பிறகு நான் படம் இயக்க தொடங்கினேன். தொலைக்காட்சி தொடர்களில் பிஸியானதால் திரைப்படம் இயக்குவதை நிறுத்த வேண்டியதாயிற்று. ராஜேஷ்குமார் சாரின் சில நாவல்களை, ஓடிடி மற்றும் யூடியுப் சேனல்களுக்காக சிறிய அளவிலான படமாக இயக்கி வைத்திருந்தேன். அதை பார்த்த தயாரிப்பாளர் பாபு தூயவன், இதுபோல் எனக்கும் ஒரு திரைப்படம் இயக்கி கொடுங்கள் என்றார். இப்படி வேண்டாம், இதை விட பெரிய அளவில் பண்ணலாம் என்று சொல்லி, தான் இந்த படத்தை தொடங்கினேன்.
இது ஒரு உளவியல் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ராஜேஷ்குமார் சாரின் நாவல்களை படிக்கும் போதே ஒரு திரைப்படம் பார்ப்பது போல் தான் இருக்கும். அந்த வகையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அவரது கதை, திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். 
கடும் போட்டிக்கு நடுவே நவம்பர் 20 ஆம் தேதி படம் வெளியாகிறது. பலர் ஏன் இந்த தேதியில் வெளியிடுகிறீர்கள், என்று கேட்கிறார்கள். மற்றப் படங்கள் வருகிறது, என்று ஒவ்வொரு வாரமும் பார்த்தால் நம்ம படத்தை வெளியிட முடியாது. எங்க படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் ரசிகர்களை எங்கள் படம் ஏமாற்றாது. பாடல், ஆக்‌ஷன் என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்கள் அடங்கிய, அதே சமயம் ரசிகர்களை மிரள வைக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக ’வயலெட் கனவு’ இருக்கும்.” என்றார்.
admin

admin

Related Posts

‘தகப்பன்’ பட 2 வது சிங்கிள்  ‘சொக்க வச்சாளே’  பாடல் வெளியானது!
News

‘தகப்பன்’ பட 2 வது சிங்கிள் ‘சொக்க வச்சாளே’ பாடல் வெளியானது!

by admin
November 19, 2026
வெளி மாநிலங்களில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ‘பீட்சா பாய்ஸ்’
News

வெளி மாநிலங்களில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ‘பீட்சா பாய்ஸ்’

by admin
November 19, 2026
தமிழ், தெலுங்கு மொழிகளில்  உருவாகும் காதல் திரைப்படம்!
News

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் காதல் திரைப்படம்!

by admin
November 19, 2026
‘அரிகொம்பன்’  புரொமோஷன் டூர் : தொடங்கி வைத்த கலைப்புலி எஸ். தாணு!
News

‘அரிகொம்பன்’ புரொமோஷன் டூர் : தொடங்கி வைத்த கலைப்புலி எஸ். தாணு!

by admin
November 19, 2026
‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
News

‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

by admin
November 19, 2026

Recent News

வெளி மாநிலங்களில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ‘பீட்சா பாய்ஸ்’

வெளி மாநிலங்களில் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ‘பீட்சா பாய்ஸ்’

November 19, 2026
தமிழ், தெலுங்கு மொழிகளில்  உருவாகும் காதல் திரைப்படம்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் காதல் திரைப்படம்!

November 19, 2026
‘அரிகொம்பன்’  புரொமோஷன் டூர் : தொடங்கி வைத்த கலைப்புலி எஸ். தாணு!

‘அரிகொம்பன்’ புரொமோஷன் டூர் : தொடங்கி வைத்த கலைப்புலி எஸ். தாணு!

November 19, 2026
‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

November 19, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?