
நல்லவர்களாக இருந்தாலும் சுழி சரியில்லை என்றால் என்ன செய்வது.?
கஷ்டம்தான்.! தன்னைப் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்யத் தயங்காதவர் பாபி சிம்ஹா.காதல் திருமணம் .நல்ல நடிகர்.திறமை சாலி,
ஆனால் சுழி சரியில்லை!
கிண்டி, ஈக்காடுத் தாங்கலில் உள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நண்பர் கருணாவுடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார். எத்தனை லார்ஜ்களோ!
போதையில் அங்கிருந்தவர்களை கண்டபடி பேசி இருக்கிறார். நண்பர் கருணாவுடனும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வாக்குவாதம் முற்றிவிட்டது. வேறு வழியின்றி போலீஸ் வந்து எச்சரித்து இருவரையும் அனுப்பி விட்டது.
வேறு யாராவது மாட்டியிருந்தால் கைது,கேசு என போயிருக்கும்!
இதான்டா போலீஸ்!












