
சண்டக்கோழி 2 இயக்குநர் லிங்குசாமி இசை வெளியீட்டு விழாவில் பேசியதாவது.
இயக்குநர் லிங்குசாமி பேசியது :-
நேற்று விஷால் இந்த படத்தை பார்த்து இதில் நடித்தவர்கள் எல்லாரும் அப்படியே உள்ளனர் பதிமூன்று வருடம் ஆனது போல் தெரியவில்லை என்றார்.எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.போன படத்தின் பேஜ் ஒர்க்குக்காக கூப்பிட்டாலும் வந்துவிடுவார்
எவ்வளவு வேலை,இரண்டு சங்கத்திலும் தலைமை பொறுப்பு அதையும் தாண்டி இப்படி மெய்ண்டன் பண்ணுவது மிக பெரிய விஷியம்.அது அவர்கள் அப்பாவிடம் இருந்து வந்தது அவரும் எப்போதும் சரியாக இருப்பார்.எனக்கு முதலில் இருந்தே ஜி.கே பேக்டரி இருக்கும் போதே,நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே தெரியும்.
அவரை தம்பி,முதலாளி,நண்பன் என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன். சண்டக்கோழி முதல் பாகம் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் உணர்ந்தேன்.இரண்டாம் பாகத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்
நான் சூர்யா,மாதவன்,அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன்.அதன் பின் இவருடன் வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன்.
இனி கதை மட்டுமே அவருக்கு சரியான முறையில் அமையும்.எனக்கும் விஷாலும் இது அருமையான படமாக அமையும் அப்படியொரு குழு அமைந்தது அவ்வளவு உழைப்பை போட்டுள்ளோம்.நான் கேட்டதை அனைத்தும் செய்து கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.
ஒரு வார்த்தையில் கவிதை சொல்ல வேண்டும் என்றால் கீர்த்தி.
கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது.
.இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் இசையமைத்த இரும்பு திரையும் அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது.மதன் கார்க்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார்.பாடல் அருமையாக வந்துள்ளது.
.பையா எப்படி காருக்குள்ளையே ஒரு படமோ அதே போல் இது ஒரு திருவிழாக்குள்ளேயே ஒரு படம்.ராஜ் கிரன் சார் அருமையாக நடித்துள்ளார். முதல் பாக தயாரிப்பாளர் விக்கிக்கும் நான் நன்றி சொல்ல கடமை கொண்டுள்ளேன். நன்றி என்றார் -லிங்குசாமி.












