
2 பாயின்ட் ஓ வின் வெற்றியை அடுத்து உடனடியாக களம் இறங்கிவிட்டார் ஷங்கர். அவரது இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கி விட்டன.
டிசம்பர் மத்தியில் அதாவது பதினாலாம் தேதி படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிடும் என தெரிகிறது.
கமலுக்கு இணையாக முதலில் நயன் நடிப்பதாக இருந்தது.அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.கையில் நான்கு படங்களை வைத்திருக்கிற நயனுக்கு கால்ஷீட் பிரச்னை.
இதனால் காஜல் அகர்வாலை ஷங்கர் தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி மேக் அப் டெஸ்ட் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் கமலுக்கு நடந்த மேக் அப் டெஸ்ட் பற்றி ஷங்கர் என்ன சொல்கிறார்.
“25 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு ஓல்டு கெட்டப் மேக் அப். அப்படியே மெய் சிலிர்த்திட்டேன். அந்த கேரக்டர் மேல அப்படியே உட்கார்ந்திருக்கிறார் .ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.”என்கிறார் ஷங்கர்.
காஜலை எப்படி பார்க்கப் போகிறோம்? அங்கும் ஆச்சரியம் காத்திருக்கிறது.!












