Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

admin by admin
April 16, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நன்றி ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்,

You might also like

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,

உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது . நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது. பிரதீப் ரங்கநாதன் சார்  அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம். ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.

பிரதீப் சார்  இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும். மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது. க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள்  எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.

இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.

விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம். எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும்,ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் —நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது, அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,

ரசிகர்களுக்கு எனது பெரிய நன்றி. இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதனுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதனுடன்  சேர்ந்து நடித்தது, எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி, ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,

இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது. அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.

பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.

முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,

இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.

இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை-கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism-ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.

இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.

இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise-ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும். அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன்.

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் நான் நம்பிக்கையோடு சொல்கிறேன். என்றார்.

admin

admin

Related Posts

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

by admin
April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026
‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !
News

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

by admin
April 15, 2026
யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’:  ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!
News

யோகி பாபுவின் ‘சன்னிதானம் பிஓ’: ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்வெளியானது!

by admin
April 15, 2026

Recent News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

April 16, 2026
‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

April 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?