
கடந்த வாரம் மீடியாக்களுக்கு கல்யாண வாரம். முதலிரவை மட்டும் எட்டிப்பார்க்கவில்லை. கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். அமர்க்களப்பட்டது பிரியங்கா–நிக் ஜோன்ஸ் கல்யாணம்தான்.
பிரியங்காவை விட பத்து வயசு கம்மியான பால் வடியும் முகத்தோடு காணப்பட்ட ஜோன்சை பந்தாடாத குறைதான்!
வாணவேடிக்கைகள்,வெடிகள் ,மாப்பிள்ளையை குதிரையில் வைத்து அழைத்து வந்தது, யானைகள் அணிவகுத்தது என பிரியங்கா கொண்டாடியது பீட்டா அமைப்புக்கு பிடிக்கவில்லை.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சகுனியாக நின்றது இந்த அமைப்புதானே!
“குதிரை மீது மாப்பிள்ளையை அமர வைத்து சாட்டையால் துன்புறுத்தியது, யானையை சங்கிலியினால் பிணைத்தது இதெல்லாம் கொடுமை.” என்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது.
வாண வேடிக்கை நடத்தி காற்றை மாசு படுத்தி விட்டார்கள் ஆஸ்துமா நோயாளியான பிரியங்காவுக்கு இது தெரிய வேண்டாமா?”என மற்றொரு சாரார் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். பாவம் பிரியங்கா!












